Singer : Hariharan
Music by : A. R. Rahman
Male : Vidu kathaiya intha vazhkkai
Vidaitharuvar yaro
Male : Enathu kai ennai adipathuvo
Enathu viral kannai kedupathuvo
Azhuthu ariyatha en kangal
Aaru kulamaga maruvatho
Male : Yen endru ketkavum nathiyillai
Ezhaiyin neethikku kannundu parvaiyillai
{Pasuvinai pambendru satchi solla mudiyum
Kambinil visham enna karakkava mudiyum} (2)
Male : Udambil vazhinthodum
Uthiram unaikketkum
Nan seitha theengu enna
Nan seitha theengu enna
Male : Vidu kathaiya intha vazhkkai
Vidaitharuvar yaro
Male : Vanthu vizhugindra mazhaithuligal
Entha idam serum yar kandar
Manithar kondadum uravugalo
Entha manam serum yar kandar
Male : Malai thanil thondruthu
Gangai nathi
Athu kadal sendru servadhu kalan vithi
{Ivanukku ival endru ezhuthiya kanakku
Kanakkugal puriyamal kanavukkul vazhakku} (2)
Male : Uravin marattam
Urimai porattam
Irandum theervatheppo
Irandum theervatheppo
Male : Vidu kathaiya intha vazhkkai
Vidaitharuvar yaro
Male : Unathu rajangam ithuthanae
Othungakkoodathu nallavanae
Thondugal seiya nee irunthal
Thollai nerathu thooyavanae
Male : Kaigalil ponnalli nee koduthai
Indru kangalil kanneer en koduthai
{Kaviyangal unai paada kathirukkum pozhuthu
Kaviyudai nee kondaal ennavagum manathu} (2)
Male : Vazhvai nee thedi vadakkae nee ponal
Nangal povathengae
Nangal povathengae
பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை
 விடை தருவார் யாரோ
ஆண் : எனது கை என்னை அடிப்பதுவோ
 எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
 அழுது அறியாத என் கண்கள்
 ஆறு குளமாக மாறுவதோ
ஆண் : ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
 ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
 {பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
 காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்} (2)
ஆண் : உடம்பில் வழிந்தோடும்
 உதிரம் உனைக் கேட்கும்
 நான் செய்த தீங்கு என்ன
 நான் செய்த தீங்கு என்ன
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை
 விடை தருவார் யாரோ
ஆண் : வந்து விழுகின்ற மழைத்துளிகள்
 எந்த இடம் சேரும் யார் கண்டார்
 மனிதர் கொண்டாடும் உறவுகளோ
 எந்த மனம் சேரும் யார் கண்டார்
ஆண் : மலைதனில் தோன்றுது கங்கை நதி
 அது கடல் சென்று சேர்வது காலன் விதி
 {இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
 கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு} (2)
ஆண் : உறவின் மாறாட்டம்
 உரிமைப் போராட்டம்
 இரண்டும் தீர்வதெப்போ
 இரண்டும் தீர்வதெப்போ
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை
 விடை தருவார் யாரோ
ஆண் : உனது ராஜாங்கம் இதுதானே
 ஒதுங்க கூடாது நல்லவனே
 தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
 தொல்லை நேராது தூயவனே
ஆண் : கைகளில் பொன் அள்ளி
 நீ கொடுத்தாய்
 இன்று கண்களில் கண்ணீர்
 ஏன் கொடுத்தாய்
ஆண் : {காவியங்கள் உனைப் பாட
 காத்திருக்கும் பொழுது
 காவியுடை நீ கொண்டால்
 என்னவாகும் மனது} (2)
ஆண் : வாழ்வை நீ தேடி
 வடக்கே நீ போனால்
 நாங்கள் போவதெங்கே
 நாங்கள் போவதெங்கே